விடுதலை போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்தோடு அவர் வீரச்சாவடைந்த இடத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு வேலன் சுவாமிகளால் மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர் வீரச்சாவடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.