அரச முறை பயணமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்கிறார்.
6 நாள் அமெரிக்கப் பயணத்தின் போது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் அவர் பங்கேற்கவுள்ளார்.
அத்தோடு ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் மாநாடுகளிலும் அவர் கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் ஏலன், உலக வங்கியின் தலைவரான டேவிட் மால்பாஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பரஸ்பர நலன்கள் குறித்து பேசவுள்ளார்.