தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஏன் காற்று மாசுபாட்டை அதிகரிக்க விரும்புகிண்றீர்களா என்றும் மனுதாரரிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளதுடன், 2023 ஜனவரி வரை அனைத்து வகையான பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்கு டெல்லி அரசும் தடை விதித்தது.
இதனை நீக்கக் கோரி பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.