ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக எட்டு சந்தேக நபர்களை ரஷ்யா கைது செய்துள்ளது.
கெர்ச் பாலத்தில் சனிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பை உக்ரேனிய இரகசிய சேவைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என மொஸ்கோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்று புதன்கிழமை ஐந்து ரஷ்யர்களையும் உக்ரைன் மற்றும் ஆர்மீனியாவின் மூன்று குடிமக்களையும் கைது செய்ததாக அறிவித்துள்ளது.
ரஷியாவின் தளவாட பகுதிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு ஒருபகுதியாக இந்த பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.