இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அரசாங்கத்தின் நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் வலுவானதாக மாற்றுவதே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முன்னேறிய நாடுகள் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை முடிவுகளால் உலகளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.