முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எதிர்வரும் வாரங்களில் எரிபொருளின் அளவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுத்தீகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் தொடர்ச்சியாக எரிபொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தற்போது சகல விதமான வாகனங்களுக்குமான எரிபொருள் விநியோகம் 60 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.