ரஷ்யாவின் இன்றைய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் உக்ரைனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது என உக்ரைன் ஜனாதிபதி நிர்வாகத்தின் துணைத் தலைவர் கைரிலோ திமோஷென்கோ தெரிவித்துள்ளார்.
ஈரானின் காமிகேஸ் ஆளில்லா விமானங்களின் மூலம் இன்று (திங்கட்கிழமை) காலை நடத்திய தாக்குத்களில் தலைநகர் கிவ்வில் உள்ள குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டுள்ளது எனவும், இதுவரை பத்தொன்பது பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதல்களில் இருந்து தப்பியவர்களை மீட்கும் முயற்சியில் அவசர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தீயை எதிர்த்து போராடி கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க அவர்கள் போராடி வருகின்றனர்.
மேயர் விட்டலி கிளிட்ச்கோவும் மற்ற அரசாங்க அதிகாரிகளும் நகர மைய வீட்டுத் தொகுதி மீது தாக்குதல் நடந்த இடத்தில் உள்ளனர்.
மேலும் துறைமுக நகரமான மைகோலைவ்வில் உள்ள சூரியகாந்தி எண்ணெய் தொட்டிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நகர மேயர் கூறினார்.
ரஷ்ய துருப்புகளால் இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது, மத்திய ஷெவ்சென்கிவ்ஸ்கி பகுதியில் குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.
‘காமிகேஸ் ஆளில்லா விமானங்கள்’ என்று அழைக்கப்படுபவற்றிலிருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் அலுவலகத்தின் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்தார்.
டெலிகிராம் சமூக ஊடகத் தளத்தில் கிளிட்ச்கோ, கடந்த வாரம் பல ஏவுகணைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மத்திய ஷெவ்சென்கிவ்ஸ்கி பகுதியில் மீட்புப் படையினர் இருப்பதாகவும், குடியிருப்பாளர்களை வான்வழித் தாக்குதல் முகாம்களில் தங்குமாறும் கூறினார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததைத் தொடர்ந்து குறைந்தது மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று (திங்கள்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி சுமார் 07:00 மணிக்கு வெடிப்புகள் நடந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றில் ஒன்று நகர மையத்திற்கு அருகில் வெடித்தது.
எனினும், இந்த தாக்குதல்களின் போது ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை.
கடந்த வாரம் தலைநகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களின் போது, 19பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த வாரம் ரஷ்யாவை ஆக்கிரமித்துள்ள கிரிமியாவுடன் இணைக்கும் முக்கிய பாலம் மீது குண்டுவீசி தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறினார்.
போரின் போது தலைநகர் கிவ்வின் மையம் நேரடியாக குறிவைக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த வார தொடக்கத்தில், உக்ரைன் மீது இன்னும் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்தும் திட்டம் இல்லை எனவும், நாட்டை அழிப்பது தனது நோக்கம் அல்ல என்றும் புடின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.