மென்செஸ்டரில் உள்ள சீன தூதரக வளாகத்திற்குள் ஹொங்கொங் ஜனநாயக ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்கள் தூதரகத்திலிருந்து வெளியே வருவதையும், ஒரு மனிதனை வளாகத்திற்குள் கட்டாயப்படுத்துவதையும் பிபிசி ஊடகவியலாளர் படம்பிடித்துள்ளார்.
பின்னர், ஹொங்கொங் ஜனநாயக ஆதரவாளர், பொலிஸ் மற்றும் பிற போராட்டக்காரர்களின் உதவியுடன் தப்பிச் சென்றார்.
தாக்கப்பட்டவர், ‘என்னை உள்ளே இழுத்துச் சென்றார்கள். பின்னர் அடித்தார்கள்’ என்று கூறினார்.
சீன ஜனாதிபதியின் அவமானகரமான உருவப்படத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்சிப்படுத்தியதாக தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து அவசரமாக தெளிவுபடுத்தப்பட உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிரேட்டர் மென்செஸ்டர் பொலிஸார் இச்சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.