தெற்காசியாவில் இலங்கை மட்டுமே பாதுகாப்பான சுற்றுலாத் தலமாக உள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, உலகில் பாதுகாப்பான சுற்றுலாத் தலங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 12ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
World Packers இணையத்தளத்தின் தரவுகளின்படி, உலக சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக சிகிரியா பட்டியலிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நியூசிலாந்து, கனடா, ஸ்பெயின், போர்த்துக்கல், அயர்லாந்து, ஜப்பான், போலந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் அந்தப் பட்டியலில் இலங்கையைவிட முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.