இந்தியா- ஆபிரிக்கா நாடுகள் இடையே பாதுகாப்பு பேச்சுவார்த்தை குஜராத் மாநிலம் காந்திநகரில் இன்று நடைபெறுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் எத்தியோப்பியா, மவுரிட்டானியா, காம்பியா, கானா மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் திறன் மேம்பாடு, இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதனிடையே, ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தும் வகையில், இந்தியா அதன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆயுத அமைப்புகள், ஸ்வார்ம் ஆளில்லா விமானங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அதன் முதன்மையான எகஸ்போ கண்காட்சியில் காண்பிக்கும்.