வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் நாட்டின் சட்ட முறைமை மாற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு தனித்துவமான உத்தியோகபூர்வ அதிகார அமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டுமெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.