பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச தனியார் துறை வங்கியான ஹபீப் பேங்க் லிமிடெட்(பி.எஸ்.எக்.ஸ்) அல்-கொய்தாவுக்கு உதவுவதன் மூலம் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதாக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளது.
அல்-கொய்தாவின் பயங்கரவாதத்திற்கு குறித்த வங்கி உதவியதாகவும் 2010-2019இற்கு இடையில் ஆப்கானிஸ்தானில் 370 பேரைக் கொன்ற தாக்குதல்களைத் தொடங்குவதற்கான சதித்திட்டத்தில் சேர்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ‘முழுமையாகவும் தீவிரமாகவும்’ எதிர்த்து வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்டுள்ள நியூயோர்க் நீதிமன்ற உத்தரவில் ‘தெரிந்தே கணிசமான உதவிகளை வழங்குவதன் மூலம் அல்லது சதி செய்த நபருடன் தொடர்புகளை பேணுவதன் மூலம் உதவி மற்றும் துணைபுரியும் ஒரு கட்சியாகவும், பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு எதிரான நீதியின் கீழ் வங்கி பயங்கரவாதத்திற்கு நிதியை அளித்தமை தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய தரப்பாகவும் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச பொருளாதாரத் தடை விதிகளைத் தவிர்க்க வாடிக்கையாளர்களுக்கு உதவ பிரதிவாதி வேண்டுமென்றே நடவடிக்கை எடுத்ததாகவும், அவ்வாறு செய்வதன் மூலம் வணிக அபாயத்தை ஏற்படுத்தியதாகவும், அது இறுதியில் பிரதிவாதியை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவதற்கு வழிவகுத்ததாகவும் முறைப்பாடுகள் உள்ளன.
தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் அறிக்கையின்படி, சுமார் 370 தனிப்பட்ட புகார்தாரர்கள் குறித்த வங்கியிருந்து இழப்பீடுகளைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வங்கிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றிய செய்தி வெளியானதால், குறித்த தினமன்று பாகிஸ்தான் பங்குச் சந்தையில் வங்கியின் பங்கு விலையில் பெரிய சரிவு ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.
கடுமையான சட்டக் குற்றச்சாட்டுகளுக்கு தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனிடம் பதிலளித்த வங்கியானது, புகார்களில் உள்ள குற்றச்சாட்டுகள் ‘தகுதியற்றவை’ என்றும், அது ‘முழுமையாகவும் தீவிரமாகவும்’ பரப்படுவதாகவும் குறிப்பிட்டது.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடுவதில் வங்கி உறுதியுடன் உள்ளது என்பது பொதுப் பதிவு தெளிவாக உள்ளதாக கூறப்பட்டதோடு மேலும் – நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளதன்படி – பணமோசடி எதிர்ப்பு இணக்கக் கட்டுப்பாடுகளின் விரிவான உலகளாவிய ரீதியில் செயற்படுத்தல் வெற்றிகரமானதும் பாரட்டப்பட்டதும் என்றும் வங்கி குறிப்பிட்டது.
தகுந்த விசாரணைகளுக்குப் பின்னர் சட்ட நடவடிக்கைகள் மற்றும் இரண்டாம் நிலை பொறுப்புகள் பற்றிய மதிப்பீடு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் கூறியதோடு மேலும் இந்த விடயத்தில் நீதிமன்றத்தால் எந்த தீர்ப்பும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது