யாழ்.பல்கலைக்கழகச் சட்டத்துறையும் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக் கிளையும் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.பல்கலைக்கழக சபையில் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது
இதன் முதலாவது உடன்படிக்கையின் பிரகாரம் தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் அனுசரணையுடன் ‘ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை’ வரை என்னும் தலைப்பில் தெரிவு செய்யப்பட்ட முப்பது சட்டத்துறை மாணவர்களுக்கு வழங்குவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரண்டாவது உடன்படிக்கையானது ‘அவள் தலைமையில்’ என்னும் தலைப்பிலான வலுவூட்டல் செயற்திட்டம் ஒன்றை விருப்ப வெளிப்படுத்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட முப்பது சட்டத்துறை மாணவிகளுக்கு அரசியல் மற்றும் சமூக வெளிகளில் தலைமைத்துவத்தை ஏற்பவர்களாக வடிவமைத்தலும் தேவையான திறன் விருத்திக்கு வழிகாட்டுதலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், கலைப்பிடத்தின் பதில் பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுமார், சட்டத்துறைத் தலைவர் திருமதி எஸ். துஷானி மற்றும் விரிவுரையாளர்கள், உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.