பல அமைச்சகங்களின் விடயதானங்களை மீளாய்வு செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் பணவியல், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனப் பதிவுத் திணைக்களமும் அந்த அமைச்சுக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
விவசாய அமைச்சின் கீழுள்ள சிலோன் போஸ்பேட் கம்பனி மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் ரோபோட்டிக்ஸ் சிறப்பு மையம் ஆகியனவும் அந்த அமைச்சுக்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்படுகிறது.
புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்படுகிறது.
கம்பனி பதிவாளர் திணைக்களம் மற்றும் சிலோன் பாஸ்பேட் கம்பனி லிமிடெட் ஆகியன கைத்தொழில் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.