அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடங்கல்களை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் உயர் அதிகாரம் கொண்ட குறித்த குழுவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
இந்தக் குழுவை அமைப்பதற்கு அமைச்சரவை இந்த வாரம் அனுமதி வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பற்றாக்குறையைத் தவிர்க்கும் பொருட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகளைச் சரிசெய்ய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தக் குழுவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர்கள் மற்றும் பல முக்கிய அமைச்சுகளின் செயலாளர்களும் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.