• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஈரானில் காவலில் உயிரிழந்த மாஷா அமீனியின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

ஈரானில் காவலில் உயிரிழந்த மாஷா அமீனியின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

Anoj by Anoj
2022/10/27
in உலகம்
69 1
A A
0
30
SHARES
994
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானில் காவலில் உயிரிழந்த மாஷா அமீனியின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று (புதன்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

22 வயதான மாஷா அமீனியின் சொந்த ஊரான சாக்வெஸில் நினைவிடத்தில் ஒன்று கூடிய போராட்டக்காரர்களுடன் ஈரானிய பாதுகாப்புப் படைகள் மோதலில் ஈடுபட்டதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘செஹெலோம்’ என்று அழைக்கப்படும் ஒருவரின் இறுதிச் சடங்கு நடந்த நாளிலிருந்து 40வது நாள், ஈரானில் கலாச்சார முக்கியத்துவத்தையும், ஷியா முஸ்லீம்களுக்கு மத முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

புதன்கிழமை, சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகள், அமினி அடக்கம் செய்யப்பட்ட சாக்கஸில் உள்ள ஆய்ச்சி கல்லறையை நோக்கி பெரும் கூட்டம் அணிவகுத்துச் செல்வதைக் காட்டியது.

கூடியிருந்தவர்களில் மற்ற நகரங்களில் இருந்து வந்து குவிந்தவர்களும் ஆயிரக்கணக்கில் காணப்பட்டனர். பலர் ‘பெண், வாழ்க்கை, சுதந்திரம்’ மற்றும் ‘சுதந்திரம், சுதந்திரம்’ என்று கோஷமிட்டனர், ஈரான் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும், நாட்டிற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட ஒற்றுமைப் போராட்டங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட முழக்கங்கள் இதுவாகும்.

ஈரானில் கலாசார காவலர்களால் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக குர்து இனத்தைச் சேர்ந்த மாஷா அமீனி கடந்த மாதம் 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார். காவலில் இருந்தபோது கோமா நிலைக்குச் சென்ற அவர், பின்னர் உயிரிழந்தார்.

மாரடைப்பு காரணமாக அமீனி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தாலும், கலாசார காவலர்கள் தாக்கியதால்தான் அவர உயிரிழந்ததாக அமீனியின் பெற்றோர் மற்றும் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. ஹிஜாபை அகற்றியும் தலைமுடியை கத்தரித்தும் பெண்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்தப் போராட்டங்களை அடக்குவதற்காக பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Related

Tags: காவல்சுதந்திரம்செஹெலோம்பாதுகாப்புப் படையினர்மாரடைப்புமாஷா அமீனிவாழ்க்கை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சினேகன் அறக்கட்டளையின் பெயரில் மோசடி- நடிகை ஜெயலட்சுமீ மீது வழக்கு

Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 25 10 2022

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06
பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!

2026-05-06
பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!
இங்கிலாந்து

பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

2026-05-06
ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!

2026-05-06
லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!
இங்கிலாந்து

லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!

2026-05-06
Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 25 10 2022

பத்திரிகை கண்ணோட்டம் 26 10 2022

பத்திரிகை கண்ணோட்டம் 27 10 2022

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

0
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

0
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

0
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.