இங்கிலாந்தில் ரயில் கட்டணத்தை செலுத்தமால் ஏமாற்றுபவர்களுக்கான அபராதம், எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 20 பவுண்டுகளில் இருந்து 100 பவுண்டுகளாக உயரும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அபராதம் ஒரு தடுப்பாகப் போதுமானதாகக் இல்லை என்ற கவலையின் காரணமாக இது உயர்த்தப்படுவதாகக் போக்குவரத்துத் துறை (டிஎஃப்டி) விளக்கமளித்துள்ளது.
பயணிகளின் பயணத்திற்கான டிக்கெட்டின் விலைக்கு மேல், அபராதம் கூடுதல் கட்டணமாக வழங்கப்படும். இருப்பினும், 21 நாட்களுக்குள் செலுத்தினால் 50 பவுண்டுகளாக குறைக்கப்படும்.
இந்த அடக்குமுறை ரயில்வே அமைப்பை நவீனப்படுத்தவும், இறுதியில் வரி செலுத்துவோரின் செலவைக் குறைக்கவும் உதவும் என்று டிஎஃப்டி பரிந்துரைக்கிறது.
புதன்கிழமை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின்படி, அந்த அபராதங்கள் 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இங்கிலாந்தில் அதிகரிக்கப்படுகின்றது.