எந்த வித நெருக்குதலுக்கும் அடிபணியாத சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவில் பல சிறந்த மாற்றங்கள் நிகழ்வதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் உரையாற்றிய அவர், இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு தனித்துவமானது என கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருவதாகக் கூறிய அவர், எந்தவித நெருக்குதலுக்கும் பணியாத வெளிவிவகாரக் கொள்கையை மோடி தலைமையிலான இந்தியா கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டுப்பற்று மிக்கவர் என்றும் மேக் இன் இந்தியா மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வருவதாகவும் இந்தியாவின் முன்னேற்றமும் வளர்ச்சியும் அனைவரின் மரியாதைக்கும் உகந்தது என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.