யாழ்ப்பாணம் பொய்ன்ட் பெட்ரோ கடல் எல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் சூறாவளி வீசியதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொய்ன்ட் பெட்ரோ கடற்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் சுழல் காற்று காரணமாக பாரிய நீர்மட்டம் வான்வெளியில் வீசியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணக் கடல் எல்லையில் பல தடவைகள் இவ்வாறான சுழற்காற்றுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் எல்லையில் சூறாவளி ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொய்ன்ட் பெட்ரோ மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.