‘மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்’ எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண் அறக்கட்டளையின் நெறிப்படுத்தலில் இந்த மர நடுகை திட்டம் ஆரம்பமானது.
இன்று (செவ்வாய்க்கிழமை) மர நடுகை திட்டம் மடு கல்வி வலத்திற் குற்பட்ட மன்- அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், மன்னார் மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிகள்,அடம்பன் பொலிசார்,பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது தேசிய மரமான நாக மரத்தை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.