நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, 6 மாவட்டங்களில் 91 குடும்பங்களைச் சேர்ந்த 340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தங்களினால் 67 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுவதால், சீரற்ற காலநிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடியசாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.