கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையில்லா வணிக நிலையம் (duty free mall) ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்கள் மூன்று இதில் உள்ளடங்குவதுடன், இது தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய தீர்வையில்லா வணிக நிலையம் எனக் கூறப்படுகிறது.
இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இதனால் குறித்த வணிக வளாகம் பாதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.