போக்குவரத்துத் துறையில் முறையான வாழ்வாதாரத்தை உருவாக்கும் ‘மம்கின்’ திட்டம் மூலமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் இளைஞர்களின் ஆற்றல் வெற்றிகரமாக வெளிப்படுவதாக யூனியன் பிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அசோக் லேலண்ட் உடன் இணைந்து யூனியன் பிரதேச நிர்வாகம், போக்குவரத்துத் துறைக்கான ‘மம்கின’ திட்டத்தினை ‘இளைஞர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான பிரதமரின் இலக்கை நோக்கிச் செல்வதை மையமாக முன்னெடுக்கப்படுகிறது’ என அரசாங்க அதிகாரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஒரு சிறந்த சமூக-பொருளாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல், சுயவேலை வாய்ப்புகள் மற்றும் வறுமையை ஒழித்தல் ஆகியவற்றை நோக்கி நகர வேண்டும் என்பது பிரதமர் மோடியின் இலக்குகளாக உள்ளன.
அந்த வகையில், ‘மம்கின்’ என்பது 18 முதல் 35 வயது வரை உள்ள வேலையில்லாத இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வாழ்வாதாரத் திட்டமாகும்.
இந்தத் திட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசாங்கத்தின் ‘மிஷன் யூத் முன்முயற்சி’ இன் ஒரு பகுதியாகும்.
‘மும்கின்’ திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு நியாயமான மானியத்துடன் சிறிய வணிக வாகனங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் ஒரு கௌரவமான வாழ்வாதாரத்தை ஈட்ட முடிகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் ஆலோசனை மையங்களில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர்களை மேம்படுத்துதல், வழிகாட்டுதல் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழான மானியமாக வாகனமொன்றுக்கு 80,000 ரூபாவை அல்லது 10 சதவீதத்தை முன்கூட்டிய மானியமாக வழங்குகிறது.
அத்துடன் வாகன உற்பத்தியாளர்கள் (அரசாங்கத்தின் திட்ட பங்குதாரர்) சிறப்பு சலுகையையும் வழங்குகிறார்கள்,
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீரின் ஆளுநர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா, இளைஞர்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் யூனியன் பிரதேசம் முழுவதிலும் உள்ள இளம் பயனாளிகளின் முதல் தொகுதிக்கு அதிக மானியத்துடன் கூடிய சிறிய வணிக வாகனங்களை விநியோகித்தார்.
பயனாளிகளில் ஒருவரான ரம்பானைச் சேர்ந்த முசாபர் வானி, தனது குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மரியாதைக்குரிய வாழ்வாதாரத்தைப் பெற உதவிய தனக்கு வாகனம் வழங்கியதற்காக நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.