சியோலில் ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் தேசிய துக்க தினத்தை தென் கொரிய ஜனாதிபதி பிரகடனம் செய்துள்ளார்.
மேலும் இன்று முதல் விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரையிலான காலம் தேசிய துக்க தினம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சியோலின் இடாவோன் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 151 பேர் உயிரிழந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் என்றும் 19 வெளிநாட்டவர்களும் அதில் அடங்குவதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 82 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.