உங்கள் குடியேற்றப் பிரச்சினைகளுக்கு எங்களைக் குறை கூறாதீர்கள் என அல்பேனியாவின் பிரதமர் குற்றம் எடி ராமா சாட்டியுள்ளார்.
பிரித்தானியா ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்படுவதாகக் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பவர்களில் இப்போது அல்பேனியர்கள் மிகப்பெரிய குழுவாக உள்ளனர்.
தெற்கு இங்கிலாந்து புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை எதிர்கொள்கிறது என்று கூறிய பிரேவர்மேன், பல அல்பேனியர்கள் நமது நவீன அடிமைச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் பிரேவர்மேன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம், 2020ஆம் ஆண்டு 50 அல்பேனியர்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 12,000 அல்பேனியர்கள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்கு வந்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இவர்களில் 10,000 பேர் ஆண்கள், அல்பேனியாவின் வயது வந்த ஆண் மக்கள் தொகையில் இது 1 சதவீத பேர்.