கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகள் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினூடாக தயாரிக்கப்படும் அறிக்கை, நீதி அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற கலவரச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 201 கைதிகளை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலன்னறுவை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் 514 கைதிகள் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மேலும் அமைதியின்மையின் போது தப்பிச்சென்ற 33 கைதிகளை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவீ ஹேரத் தெரிவித்தார்.