வெலிகந்த – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான அறிக்கை இன்று (வியாழக்கிழமை) பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி அறிக்கையொன்றை வழங்க வேண்டும் என அறிவித்த நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.
வெலிகந்த – கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 202 பேர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மோதலுடன் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து சேனபுர புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 218 கைதிகள் மீண்டும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தப்பியோடிய 26 கைதிகளை கண்டுபிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.