அடுத்த வாரம் பாலியில் நடைபெறும் உலகத் தலைவர்களின் ஜி20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் ரஷ்ய தூதுக்குழுவை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், வழிநடத்துவார்.
இந்தோனேசியாவில் உள்ள ரஷ்ய தூதரகம், புட்டினின் வேலைத்திட்டம் இன்னும் செயற்பட்டு வருகிறது என்றும் ரஷ்ய தலைவர் உச்சிமாநாட்டில் கிட்டத்தட்ட பங்கேற்கலாம் என்றும் கூறியது.
இந்தோனேசிய அரசாங்க அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், லாவ்ரோவ், புட்டினை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் ரஷ்ய ஜனாதிபதி உச்சிமாநாட்டின் கூட்டங்களில் ஒன்றில் கலந்துகொள்வார் என்றும் கூறினார்.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இந்த வார தொடக்கத்தில் பைனான்சியல் டைம்ஸிடம் ரஷ்ய தலைவர் கூட்டத்தைத் தவிர்ப்பார் என்ற வலுவான அபிப்பிராயம் இருப்பதாகக் கூறினார்.