முதல் உலகப் போர் முடிவடைந்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) பிரித்தானியாவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படுகின்றது.
நாடு முழுவதும் இராணுவ மோதல்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் காலை 11 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும்.
க்ளௌசெஸ்டரின் டியூக் மற்றும் டச்சஸ் ஸ்டாஃபோர்ட்ஷையரில் நடைபெறும் தேசிய நினைவு ஆர்போரேட்டம் ஆர்மிஸ்டிஸ் டே சேவையில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் லண்டன், எடின்பர்க், பெல்ஃபாஸ்ட் மற்றும் போர்ட்ஸ்மவுத் ஆகிய இடங்களிலும் சேவைகள் நடைபெறுகின்றன.
எடின்பரோவில், நகரின் துணை பிரபு ப்ரோவோஸ்ட், கவுன்சிலர் லெஸ்லி மரியன் கேமரூன், படைவீரர்கள், சேவை செய்யும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து நகரின் நினைவுத் தோட்டத்தில் அஞ்சலி செலுத்துவார்.
இதனிடையே, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பரிசில் நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி கலந்து கொள்கிறார்.
கடந்த 1918ஆம் ஆண்டு முதல் உலகப் போரின் முடிவைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 ஆம் திகதி 11:00 மணிக்கு மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்படுகிறது.