இஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை அமைக்க பெஞ்சமின் நெதன்யாகுவை அழைப்பதாக இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுக்கு இது, நாட்டின் உயர் பதவியை ஆறாவது முறையாகப் பெறவும், நாட்டின் நீண்ட காலம் பணியாற்றிய தலைவராக தனது சாதனையை நீடிக்கவும் வழி வகுத்துள்ளது.
ஹெர்சாக் நெதன்யாகுவை ஜனாதிபதியின் இல்லத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து முறைப்படி அவருக்கு ஆணையிடுவார். இஸ்ரேலிய சட்டத்தின் கீழ், நெதன்யாகு ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க 28 நாட்கள் அவகாசம் வேண்டும், தேவைப்பட்டால் 14 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆலோசனையின் முடிவில், நெசெட்டின் 64 உறுப்பினர்கள் லிகுட் பிரிவின் தலைவரான எம்.கே. பெஞ்சமின் நெதன்யாகுவை ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தனர். 28 நெசெட் உறுப்பினர்கள் வெளியேறும் பிரதமர் யாiர் லபிட்டை பரிந்துரைத்தனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளின் போது, நெதன்யாகு தனது கூட்டணிக் கூட்டாளிகளிடையே அமைச்சகங்களைப் பிரித்து கொள்கைகள் மீது பேரம் பேச வேண்டும்.
இங்குதான் விடயங்கள் சுவாரஸ்யமானவை. 120 இடங்கள் கொண்ட நெஸ்செட் அல்லது நாடாளுமன்றத்தில் நான்கு இடங்கள் பெரும்பான்மையுடன், நெதன்யாகுவின் லிகுட் உடன் இணைந்த ஐந்து பிரிவுகளும் சாத்தியமான கிங்மேக்கர்கள். அவர்களில் ஒருவருக்கு அவர்கள் விரும்பியதைக் கொடுக்கத் தவறினால், அவர்கள் கூட்டணியை வீழ்த்தலாம்.
இஸ்ரேலில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 4 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நிலையான ஆட்சி அமைய முடியாத நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில், நான்கே ஆண்டுகளில் 5ஆவது முறையாக கடந்த 1ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 161க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.