சில மாதங்களில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை மிக உயர்ந்த நிலைக்கு உயர்ந்தாலும், சீனா தனது சில கொவிட் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்தியுள்ளது.
நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கான தனிமைப்படுத்தல் அரசு வசதிகளில் ஏழு நாட்களிலிருந்து ஐந்து நாட்களாகவும் வீட்டில் மூன்று நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை தொடர்புகளைப் பதிவு செய்வதையும் அதிகாரிகள் நிறுத்துவார்கள். அதாவது பலர் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பார்கள்.
ஷி ஜின்பிங் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது முறையாக கட்சித் தலைவராக மீண்டும் பதவியேற்ற சில வாரங்களுக்குப் பிறகு இந்த சிறிய தளர்வு வந்துள்ளது.
இதனிடையே, தடுப்பூசிகளை விரைவுபடுத்துவதற்கான திட்டத்தை உருவாக்குவதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங், குவாங்சோ மற்றும் ஜெங்சோ நகரங்கள் தற்போது சாதனை எண்ணிக்கையைக் காண்கின்றன. வியாழக்கிழமை சீனாவில் 10,50க்கும் மேற்பட்ட புதிய கொவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன
சீனாவின் பூஜ்ஜிய- கொவிட் கொள்கை 1.4 பில்லியன் மக்கள் வாழும் நாட்டில் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது, ஆனால் பொருளாதாரம் மற்றும் சாதாரண மக்களின் வாழ்க்கைக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.