2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 135 வாக்குகள் கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்து, பொது மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் என கூறினார்.
வரவு செலவுத் திட்டம் எதிர்கால சந்ததியினருக்கான சாதகமான முன்மொழிவு எனவும் பொது மக்களை ஏமாற்றுவதில் கவனம் செலுத்தவில்லை எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.