ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வரிக் கோப்பை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று காலை உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.