அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டம் மக்களின் மீது மேலும் சுமைகளை ஏற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பொருளாதார ரீதியில் பாதிப்படைந்த மக்களின் வாழ்க்கைச் செலவை மேலும் அதிகரிப்பதே இதன் நோக்கம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு வங்குரோத்து நிலைமையை அடைந்தமைக்கு முக்கிய காரணமானவர்களிடம் இருந்து அவற்றை மீண்டும் கொண்டுவரும் எந்த திட்டமும் இதில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமன்றி, நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல்களையும் இலஞ்சங்களையும் நிறுத்தி, அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லக்கூடிய திட்டமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஒரு வரவு செலவுத் திட்டம் தமிழ் மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஏற்புடையதல்ல என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆகவே இந்த வரவு செலவுத் திட்டமானது நிராகரிக்கப்பட்டு குப்பைக் கூடைக்குள் வீசப்பட வேண்டிய ஒன்று என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.