நாட்டை அழித்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தினால் மாத்திரமே அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
பழைய விடயங்கள் அனைத்தையும் மறந்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் என வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அதனை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்ட ஹர்ஷன ராஜகருணா, நாட்டை அழித்தவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தார்.
அமைச்சர்களையும், இராஜாங்க அமைச்சர்களையும் அதிகளவில் நியமித்து, அவர்களுக்கான செலவை குறைக்க ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செய்யப்படவில்லை என்றும் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.