வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் “கார்த்திகை வாசம்” என்ற மலர்க் கண்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமானது.
நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமான மலர்க் கண்காட்சி நவம்பர் 27 ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இன் நிகழ்வு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றதோடு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா.சண்முகலிங்கன் சிறப்பு விருந்தினர்களாகச் கலந்து சிறப்பித்தார்.
இதேவேளை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மரநடுகை மாதத்தைச் முன்னெடுத்து வருவதோடு மலர்க்கண்காட்சி ஒன்றையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.