வட கொரியாவில் இருந்த அமெரிக்காவை முழு அளவுக்கு தாக்கும் தொலைவுக்கு திறன் உள்ள ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் தலைநகர் பகுதியில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு ஏவப்பட்ட இந்த ஏவுகணை அந்நாட்டின் வடகிழக்கு பகுதி முழுவதையும் கடந்து ஜப்பானின் ஹகாய்டோ தீவின் வடக்குப் பகுதியில் விழுந்தது என்றும் இந்த ஏவுகணை நிலப்பரப்பில் இருந்து அதிகபட்சமாக 1,000 கி.மீ. மேல்நோக்கி சுமார் 6,000 முதல் 6,100 கி.மீ. தொலைவுக்கு பறந்துள்ளது என்றும் தென் கொரியாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன.
இந்த ஏவுகணை உயரமான பகுதியில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்றும் 15 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை நீடிக்கும் திறன் இதற்கு உண்டு என்பதால் அமெரிக்காவின் முழு பகுதியையும் இது சென்றடையும் என்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த மாதத்தில் வடகொரியா நடத்திய இரண்டாவது மிகப்பெரிய ஏவுகணை சோதனையாக இது கருதப்படுகிறது.