தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்ற அபெக் பொருளாதார உச்சி மாநாட்டிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, மக்கள் மீது பொலிஸார் றப்பர் தோட்டாக்களை கொண்டு துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் கலந்து கொண்ட வேளை, உச்சிமாநாடு நடைபெறும் இடம் அருகே பொலிஸாருக்கும் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள், ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் வாகனத்தை கவிழ்க்க முயற்சிப்பதை காட்டியது. பதிலுக்கு பொலிஸார் அவர்களை கேடயங்களுடன் முன்னேறி, தடியடியால் திருப்பி அடித்தனர்.
தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடத்தி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் இருந்த இளைஞர் ஆர்வலர் ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பிரயுத் முதலில் 2014ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சியில் ஆட்சியைக் கைப்பற்றினார், பின்னர் 2019இல் மிகவும் தடைசெய்யப்பட்ட தேர்தலின் கீழ் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். இந்த ஆண்டு அவருக்கு எதிராக பலமுறை நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவர் தப்பினார்.