ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமானதும் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா உரையாற்றினார்.
இதன்போது அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தாக்க முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து, அவரை சபையைவிட்டு வெளியேறுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
இதன்படி சமிந்த விஜேசிறி இன்றைய முழு நாள் விவாத நிகழ்வில் பங்கேற்க முடியாது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் இருப்பதாக கூறி நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாத பிரதிவாதங்களின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உள்ளுராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் இல்லையென்றும் எனினும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்று நிமல் லன்சா தெரிவித்துள்ளார். இதன்போதே, அவரை சமிந்த விஜேசிறி தாக்குவதற்கு முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.