மேற்கு துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
டூஸ் நகருக்கு அருகே இன்று அதிகாலை 4.08 மணிக்கு 5.9 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் கோலியாகா மாவட்டத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் 6.81 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இஸ்தான்புல் மற்றும் தலைநகர் அங்காராவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மொத்தம் 18 அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் ஒருவர் உயரத்திலிருந்து குதித்ததால் ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சர் ஃபஹ்ரெட்டின் கோகா தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவ மீட்புக் குழுக்கள் தொடர்ந்தும் மீட்பப் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 268ஆக உயர்வடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.