வைரஸை ஒழிக்க வடிவமைக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சீனா அதன் அதிகபட்ச தினசரி கொவிட் தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது.
தலைநகர் பெய்ஜிங் மற்றும் தெற்கு வர்த்தக மையமான குவாங்சோ உட்பட பல முக்கிய நகரங்களில் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
நேற்று (புதன்கிழமை) நாட்டில் 31,527 தொற்றுகள் பதிவாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் அதன் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் முடக்கப்பட்டபோது பதிவான 28,000 உச்சத்தை விட இது அதிகம். கடுமையான முடக்கநிலைகள் தொடர்ந்து அமைதியின்மையைத் தூண்டுவதால் இது வருகிறது.
சீனாவின் பூஜ்ஜிய-கொவிட் கொள்கை 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட நாட்டில் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. ஆனால் பொருளாதாரம் மற்றும் சாதாரண மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.
எவ்வாறாயினும், நாடு அதன் சில கொவிட் கட்டுப்பாடுகளை சிறிது தளர்த்திய சில வாரங்களுக்குப் பிறகு தொற்றுகளின் அதிகரித்து வரும் தொற்றலை வருகிறது.
மத்திய நகரமான ஸெங்சோவ் வெள்ளிக்கிழமை முதல் 6 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு பயனுள்ள முடக்கநிலையை அமுல்படுத்த உள்ளது என்று அதிகாரிகள் அறிவித்தனர்.