பாடசாலை ஆசிரியர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அது தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் எட்டப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் அனைத்து ஆசிரியர்களும் முன்பு இருந்த நடைமுறைகளின்படி பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் விரும்பும் ஆடையில் பாடசாலைக்கு சமூகமளித்த பல ஆசிரியர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.