பொருளாதாரம் தொடர்பாக மத்திய வங்கி அதிகாரிகள் அண்மையில் எடுத்த தீர்மானங்கள் குறித்து அமைச்சரவையும் நாடாளுமன்றமும் கேள்வி எழுப்ப வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் மத்திய வங்கியின் அதிகாரிகள் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டால், அண்மைக்காலமாக எடுத்த தீர்மானங்கள் குறித்து தங்களால் கேள்வி எழுப்ப முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பத்திரங்களை வழங்குதல், மாற்று விகிதங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் ஆகியவற்றில் மத்திய வங்கியே முடிவுகளை எடுத்தது என்றும் அவர் கூறினார்.
அரசியலமைப்பின்படி அதிகாரங்கள் சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் நிதிகள் மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுவதாகத் தெரிகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேநேரம், தற்சமயம் 30 வீதமாக இருக்கும் அதிக வட்டி விகிதங்கள் குறித்தும் அமைச்சர் இதன்போது கேள்வி எழுப்பினார்.