கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், குழுநிலைப் போட்டிகளில் அவுஸ்ரேலியா மற்றும் ஆர்ஜெண்டீனா அணிகள் வெற்றிபெற்று ரவுண்ட்-16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
குழு டி பிரிவில் நடைபெற்ற போட்டியில், அவுஸ்ரேலியா அணியும் டென்மார்க் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
அல் ஜனோப் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில் அவுஸ்ரேலியா அணி சார்பில், போட்டியின் 60ஆவது நிமிடத்தில் மெத்தியு லொக்கி அணிக்காக வெற்றி கோலை அடித்தார்.
குழு சி பிரிவில் நடைபெற்ற போட்டியில், ஆர்ஜெண்டீனா அணி மற்றும் போலந்து அணிகள் மோதின.
ராஸ் அபு அபவுத் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆர்ஜெண்டீனா அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆர்ஜெண்டீனா அணி சார்பில், போட்டியின் 46ஆவது நிமிடத்தில் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் 46ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஜூலியன் அல்வாரெஸ் 67ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
குழு டி பிரிவில் நடைபெற்ற போட்டியில், துனிசியா அணியும் பிரான்ஸ் அணியும் மோதின.
எடிவுகேஷன் சிட்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், துனிசியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
துனிசியா அணி சார்பில், வாபி காஸ்ரீ போட்டியின் 58ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
குழு சி பிரிவில் நடைபெற்ற போட்டியில், மெக்ஸிகோ அணியும் சவுதி அரேபியா அணியும் மோதின.
லுஸைல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், மெக்ஸிகோ அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
இதில், மெக்ஸிகோ அணி சார்பில், ஹென்ரி மார்டின் 47ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், லுயிஸ் சாவெஸ் 52ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
சவுதி அரேபியா அணி சார்பில், சேலம் அல் தவ்சாரி போட்டியின் 95ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.