நாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசிற்கு சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;
சிவப்பு பச்சை அரிசி 1kg- 6 ரூபாய் குறைப்பு
புதிய விலை -199 ரூபாய்
கீரி சம்பா 1kg–15 ரூபாய் குறைப்பு
புதிய விலை – 225 ரூபாய்
பெரிய வெங்காயம் 1kg – 30 ரூபாய் குறைப்பு
புதிய விலை – 225 ரூபாய்
நெத்தலி 1kg – 150 ரூபாய் குறைப்பு
புதிய விலை – 1150 ரூபாய்