ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவின் விளாடிமிர் புடினைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து ஊடகவியலாளரை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் கூறுகையில், ‘உண்மையில் அவர் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைத் தேடுகிறார் என்று முடிவு செய்வதில் ஆர்வம் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்’ என கூறினார்.
மேலும், ரஷ்யாவின் போருக்கு எதிராக தாங்கள் தொடர்ந்து நிற்போம் என்று இருவரும் இதன்போது வலியுறுத்தினர்.
உக்ரைனியர்களை ஒரு சமரசம் செய்ய அவர்கள் ஒருபோதும் வலியுறுத்த மாட்டார்கள் என்று பைடனுடன் தான் ஒப்புக்கொண்டதாக ஜனாதிபதி மக்ரோன் தெளிவுபடுத்தினார்.
இதற்கு பதிலளித்த ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ‘அமெரிக்க நிபந்தனைகளை ஏற்க ரஷ்யா நிச்சயமாக தயாராக இல்லை’ என கூறினார்.
முன்னதாக, ரஷ்ய துருப்புக்கள், உக்ரைனை விட்டு வெளியேறிய பிறகுதான் பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகும் என்று பைடன் கூறியிருந்தார்.