கொங்கோவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலையை கண்டிப்பதாக ஐ.நா.வின் அமைதி காக்கும் படை தெரிவித்துள்ளது.
மேலும் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டுவர விசாரணை அவசியம் என்றும் அந்நாட்டில் உள்ள ஐ.நா.வின் அமைதி காக்கும் படை அழைப்பு விடுத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள், உறுதிசெய்யப்பட்டால், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் குற்றங்களாக கருதப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
நவம்பர் 23 ஆம் திகதி அன்று ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்தை மீறிய இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது.
மேலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்த கொலைகள் போர்க் குற்றங்கள் என அறிவித்துள்ளனர்.
இந்த மோதலில் உயிர் பிழைத்தவர்களை பாதுகாக்க ஐ.நா துருப்புக்களை அனுப்ப வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.