மின்சார சபை ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை 1 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுள்ள நிலையில், மின்சார கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மின்சார சபை சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தியது, எரிபொருள் மற்றும் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன இவ்வேளையில் மீண்டும் அதிகரித்தால் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல ஊடக அறிக்கைகள் இலங்கை மின்சார சபை ஒகஸ்ட் 10 முதல் நவம்பர் 30 வரை 1 பில்லியன் ரூபாவை பெற்றுள்ளதது எனவே கட்டணத்தை அதிகரிக்க இது சரியான நேரம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.