ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை அரசாங்கப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு முடிவு எடுத்திருந்தது.
இந்த தீர்மானத்துக்கு நிறைவேற்று சபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு நேற்று (3) பிற்பகல் கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது.
இதன்போது குறித்த அங்கீகாரம் கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் கட்சி மீதான விமர்சனங்களுக்கு மக்களுடன் இணைந்து பதிலளிப்போம் எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.