பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி திருத்தப்பட்டுள்ளது.
இந்த வரி திருத்தம் இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் விசேட பண்ட வரி 10 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மே மாதம் 18ஆம் திகதி முதல் ஒரு கிலோ டின்மீன் மீது விதிக்கப்பட்டிருந்த 100 ரூபாய் விசேட பண்ட வரி 200 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது.